1

மதபாகுபாடுஇல்லாமல்மனிதர்அனைவரின்மூச்சுகாற்றும்காற்றில்கலக்கும். மனிதர்அனைவரின்மதங்களும்இறைவனிடத்தில்கலக்கும்.

மருத்துவத்திற்குநோயாளி,
எதிரிஅல்ல,
நோய்தான்எதிரி. 

நம்மைதுன்பப்படுத்துகிறவர்எதிரிஅல்ல, துன்பப்படுத்தும் காரணிகளேஎதிரிகள். 

அரிவாளால்வெட்டிநல்லதைவம்புசெய்துஉணர்த்துவதைவிட,  அறிவினைசுட்டிநல்லதைதெம்புதந்துஉணர்த்துவதேதிறமை.

திறமையை
காட்ட இயலுமா? திறமையை காட்டுங்கள்நன்மைக்கு

 

உதவி 

             தன்னிடமென்று உள்ள திறமைகளை, உழைப்புக்கு பயன்படுத்தாத ஊதாரி, சோம்பேறி இவர்கள் எல்லாம் மெத்தன வாழ்க்கை வாழ்ந்து பார்க்கிறார்கள்

            இதனால் எல்லாம், நம் சம்பாதிக்கும் சுமை அதிகமாகிறது.   சமுதாயத்திற்கு ஏதாவது, ஒரு வழியலக்கூட உதவாமல், பிச்சை கேட்கிறவர்களுக்குக்கூட உதவுகிறார்கள்.

           செய்கிறவனையே செய்ய சொல்றதா என்பார்கள்.

             வேலை செய்து, குறைந்த சம்பளம் வாங்குகிறவர்களுக்கு, ரொம்ப முடியாதபட்சத்தில், அவர்கள் உதவி கேட்டா உதவி செய்கிறோமா?

              உழைக்காதவர்களை எல்லாம், விட்டுவிடுகிறார்கள்.   

             குறைந்த சம்பளம் வாங்குகிறவர்கள், உழைக்கமாட்டேன் என்று சொல்கிறார்களாஉழைப்பே உயர்வு அல்லவா? இவ்வுயர்வை பிடித்திருப்பவர்கள், இக்கட்டான பரிதாப நிலையில் உதவி செய்ய கணக்கு பார்க்கனுமா?

             பிச்சை கேட்கவும், அடுத்தவர்களை அடிச்சி, புடிச்சி ஊதாரிதனமாகவும், சோம்பேறியாகவும் மெத்தன வாழ்க்கை வாழ ஏய்ப்பவர்களுக்கு இவ்வுலகத்தில் வாய்ப்பு கிடைக்கிறது.   

             வெள்ளம்போல நம் அரும் முயற்சி பாழாகிறது. ஒரு சொம்பு தண்ணீர், உழைப்பவருக்கு கொடுக்க, முன்ன பின்ன பார்க்கணுமா?

               ஜாதி வித்தியாசம் பார்க்கிறோம், உழைப்புல சம்பள வித்தியாசம் எப்படி பார்க்கக்கூடாது என்றால் கவலைக்கிடமான நிலையில், உள்ள உழைப்பவர்களுக்கு  சாக்கு, போக்கு சொல்லி ஆறுதல் அளிக்க தடையாய் இருக்கக்கூடாது. 

உழைக்கிறவர்கள், காட்டும் உழைப்பு, தியாகமாக இருக்க வேண்டும்அந்த தியாகம், முதலில் அவர்களுக்கு, திறனை கொடுக்க அமைய வேண்டும்சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் அல்லவாபிறகு சிறு குழந்தை முதல், சிறுவர், சிறுமியர், வயோதிகர், நோயாளிகள் இவர்களுக்கு இந்த உழைப்பின் தியாகம் உழைப்பவர்களால் பயன்ப்படுத்தப்பட வேண்டும். 

ஆனால், ஊதாரிக்கும், சோம்பேறிக்கும், உழைப்பவர்களால் கொடுக்கப்படும் உழைப்பின் தியாகம் பயன்ப்படுத்தப்படக்கூடாது. 

ஆனால் இவர்களுக்கு, வந்த வாழ்வுக்கூட, குறைந்த சம்பளம் வாங்குகிற உழைப்பாளிகளின் அடிப்படை, பூர்த்தியாகவில்லை என்றால் என்ன செய்வது?

சும்மா கொடுத்த மாட்டை பல்லு பார்த்த கதையா? 

சேரி, பரிதாபமா இருக்கு அப்படின்னு ஒருத்தருக்கு சும்மா (இனாமா) மாட்டை கொடுத்தா இது இளமையாய் இல்லை என்று மாட்டின் பல்லை கவனித்து சண்டைக்கு வந்த நிலைமையை பாருங்க. கொடுத்த மாடு இளங்கன்றை ஈனாதா?   

இதுபோலத்தான் உழைக்கிறவனையே ஒரு நேரத்திலாவது அனுசரிக்காம  குறைத்து மதிப்பிட்டு கொண்டே இருந்தால் எப்படி?        

பிச்சைக்காரர் ஒன்றுமே செய்ய முடியாதா? 

அவர் வாழ்க்கையில் ஒரு முறையாவது ஒரு மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றி அதன் வளர்ச்சிக்கு உதவி இருப்பாறாஅல்லது சிறிது கழிவை எருவாக்கியிருப்பாறா? 

இந்த நன்மையெல்லாம் தெரிந்து கொள்ளும் பிச்சையை அந்த பிச்சைக்காரருக்கு அளித்திருக்கிறோமா?

தன் வருமானத்தின் ஒரு சிரிதளதாவது பிச்சைக்காரர் சுற்றுச்சூழல் நன்மைக்கு விரதமிருந்து அந்த வருமானத்தை செலவழித்திருப்பாறா 

எங்க நமக்கே அந்த விழிப்புணர்வு இல்ல அப்பறம் எப்படி?

இறைவன் திருமேனி என்றும்,
இறைவனின் சரீரமாகிய சபையின் அங்கத்தினர் என்றும் மனிதரும் பங்குபெறும்
அன்பு திருமேனி ஆற்றும் தொண்டுகள் அல்லது அன்பு சரீரமாகிய சபையின் அங்கமான
தொண்டுகள் என்பது கூட்டு சக்தியின் ஒருங்கிணைப்புக்கு எப்படி
பொருந்துகிறதுஇறைவன் அன்பாகவே இருக்கிறார். 

 

சுபத்தின் சாரம் சுபச்சாரம் 
ஆரோக்கியத்தின் சாரம்நல்ல உணவு, நல்ல உடை, நல்ல உறக்கம், நல்ல உழைப்பு, நல்ல எண்ணம், நல்ல செயல்கள் போன்றவைகளின் சுபம்

 

தாய்கள் மற்றும் தந்தைகள் 
குடும்ப கட்டுப்பாடு வேண்டும். நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று நடைமுறைப்படுத்த அரசாங்கம் மக்களிடம் விரும்புகிறது. 
மக்கள் எள்ளுனா எண்ணையா நிற்கிறது போல் அரசின் விருப்பத்திற்கு அதிக ஈடுபாடோடு மக்கள் இருப்பார்களா?

என்ன?
ஒருவர் நான்கு கணவரோ, நான்கு மனைவியோ என்று ஒன்றுக்கு மேற்ப்பட்டவரோடு 
வாழ்க்கை துணையை தேடிக்கொண்டு ஒரு வாரிசோ, இரண்டு வாரிசோ என்று 
பெற்றுக்கொண்டு மக்கள் நெருக்கதை குறைக்க வழி கண்டார்களானால் அது 
விபச்சாரமா? சுபச்சாரமா? 

ஒருத்தருக்கு ஒருத்தர் என்று ஒரு கணவனோ, ஒரு மனைவியோ உள்ளவர்கள் 10 , 16 என்று மக்கள் நெருக்கத்திற்கு காரணமாக வாரிசு பெற்றுக்கொண்டால் அது விபச்சாரமா? சுபச்சாரமா?

நல்ல குணங்களின் திருமணம்அன்பே இறைவன், அன்பே சிவன், ஏக இறைவன் அன்பானவர். 
இத்தகைய அன்பு திருமணத்திற்கு. ஆண் பெண்கள் வேண்டும். 

இறைவனுக்கு பல மனைவி ஆம். பரிசுத்த மணவாளனுக்கு பல மணவாட்டி. 

கடுமையான குணமான கோபம் என்ற 
ஆணுக்கு பல மனைவியாக இரக்கம் என்ற மண பெண்ணும், தயவு என்ற மண பெண்ணும், 
நீடிய பொறுமை என்ற மண பெண்ணும் என்று பல நற்குணங்களாகிய பல பெண்கள் கோபம் 
என்ற ஆணுக்கு நல்ல அற துணைவிகளான பல மனைவிகள் உண்டு. தவறு நிகழுமானால் அதை
சரி செய்ய அக்கறை, இரக்கம் போன்ற நற்குணங்களுடன் கூடிய பொறுப்புள்ள நல்ல கோபம் சேர்ந்து சரியானதை நிகழுத்தும்படி செயல்படும். அந்த கோபம் தணிந்து 
அமைதியையும், சமாதானத்தியும், மகிழ்ச்சியையும் பெருகச்செய்யும். 

ஒழுங்கு குன்றிய சமுதாயத்தை 
ஒழுங்கு படுத்த பொறுப்பும், இரக்கமும், கவனிப்போடு கூடிய நல்ல 
கோபம்கொண்டவர்களாக சிவன், முருகன், முகமது நபி, இயேசு, அம்பேத்கார், 
காந்தி, புத்தர், சீனிவாச ராமனுஜன், தாமஸ் ஆல்வாய் எடிசன், அகத்தியர் போன்ற
பலர் பங்களித்தனர்.

 

சொத்து வாரிசு, அரசியல் வாரிசு, 
இசை வாரிசு, ஆன்மீக வாரிசு என்பதன் பின்னணி என்ன? இந்த வாரிசுகள் யாருக்கு
பிறந்தவர்கள்? எப்படி பிறந்தவர்கள்? எப்படி வாரிசு. 
இறைவனை தாய், தந்தை, மகன், மகள்,
தாத்தா, சகோதரன், சகோதரி, மனைவி, கணவன் என்றால் எப்படி 
கொச்சைப்படுத்தப்படுகிறது? வாரிசு என்றால் எந்தவகையில் உறவு? 

நாடு எனக்கு என்ன செய்தது என்பதைவிட நாட்டுக்கு நீ என்ன செய்தாய்? என்றார் 
ஒரு மேதை. பிறருக்கு என்ன செய்தாய்? அதை எனக்கே செய்தீர்கள்? பிற 
மதங்கள் எனக்கு என்ன நன்மை செய்தது என்பதைவிட பிற மதங்களுக்கு நீ எந்த 
நன்மை செய்தாய்? 

இறைவனே உமது நாமத்தால் என்னென்ன 
செய்தோம் என்கிறாயே? உனது நாமம் நிலுவையில் உள்ளதா? உனது நாமமான உன் முயற்சி, உன் செயல்பாடு பிறருக்கு செய்வதில் நிலுவையில் உள்ளதா? 
அப்படியென்றால் நீ லாபம் அடைந்தாயா? இல்லை உன் இறைவன் லாபம் அடைந்தாரா? 
பிறர் லாபம் அடைந்தனரா? 

நீ லாபம் அடையவில்லை எனில் உனக்கு உன் இறைவனும், பிறரும் கடன் பட்டு உள்ளனர்? அவர்கள் உனக்கு லாபம் தரவேண்டியுள்ளது. 

குழந்தையானது நன்கு பேசுவதற்கு கடனாளியாக உள்ளது. ஆனால் புரிந்து கொள்வதில் லாபம் அடையும் பொழுது பேசுகிறது. 

நீ இன்னும் கடனாளியா? எபொழுது லாபம் அடைவாய். நீ இன்னும் அன்புக்கு கடனாளியா? எப்பொழுது அன்பு லாபம் அடையும்.

எதுவரை குழந்தையாய் இருப்பாய் பேசப்படாமல்

சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்தார் என்றும் இயேசு சிலுவை 
சுமந்தார் என்றும், முகமது நபி அக்கால சமுதாய எதிர்ப்பை சுமந்தார் என்றும் 
உள்ளதே. தியாகிகளும் நல்ல அறத்தை சுமந்தனர். விஞ்ஞானிகள் நல்ல 
கண்டுபிடிப்பை சுமந்தனர். இவ்வாறாக இவர்கள் சுமந்த பாடுகளின் ஒற்றுமை 
என்னவென்றால். 

மனதிற்கென்று அன்பின் பாடுகள் தான். அவற்றில் சில என்னன்னா. இடர்(பாடு), செயல்(பாடு), உடன்(பாடு) தீமைஎன்பது இடர்பாடு, நல்ல செயல்பாடுஎன்பது தீமையின் மரணம். உடன்பாடு என்பது தீமை நன்மையாக உயிர்பெறுதல் உதாரணத்திக்கு கழிவு என்பது இடர்பாடு, எருவாகுதல்   நல்லசெயல்பாடு தாவரம் செழிபடைதல்உடன்பாடு

 

தரவு

தரவு என்பது அடிப்படை
தகவல்கள் தருவது

தரவு பார்ப்பதில் வேதனையான
தரவுகள்

பொறுமையால் நன்மை கைகூட
வேண்டிய நேரத்திற்குள் அவசரபடுத்தி பொறுமையை தடுக்கும் தொந்(தரவு).
 

சுறுசுறுப்பால் நன்மை கைகூட வேண்டிய
நேரத்திற்குள் தாமதப்படுத்தி சோம்பலை கொடுக்கும்
 தொந்(தரவு).

தரவு பார்ப்பதில்
மகிழ்ச்சியான தரவுகள்

நன்மையை அதிகரிக்க தீமையை
குறைப்பதற்கு அதிகமாய் செலவிடும் நல்ல ஊதாரிதனத்தின் ஆ(தரவு).

நன்மைக்கு சீரமைக்க தேவையான
விவேகத்தை செலவிடாத கெட்ட ஊதாரி தொந்(தரவி)ன் ஆ(தரவு).
 

தோஷம் 
நமக்கு தோஷம் நீங்க வேண்டும்.

ஜல(தோஷம்) அடிக்கடி வருவது
நின்றால்தான் நிம்மதி நம்மிடையே கெட்ட பழக்க(தோஷம்) அறவே அகன்றால்தான் நல்ல
நிம்மதியான நல்ல வாழ்வு உண்டு.

ராமர் – கர்ணன் 

ராமர் குறிபார்த்து அம்பு எய்து எதிர்ப்பை வீழ்த்துவதில் வல்லவர். 
அதுபோல் நாம் தீமையின் கேள்விகுறிபார்த்து அன்பை எய்து தீமையின்
எதிர்ப்பை வீழ்த்தும் வல்லமை பதிலை பெறவேண்டும்.
 
இது ராமரின் மன போராட்ட அம்பு எய்தும் வல்லமையாகும். 
இரும்பு கத்தியை அம்பாக எய்துவதுபோல். 
கரும்பு புத்தியை அன்பாக எய்தவேண்டும். 

அரச வாழ்கை வாழ்ந்த ராமன். காட்டிலே
வாழ்வதையும் மனதிலே எதிர்கொண்டவர்.
 நற்குணத்தின் அம்பை காட்டிலே வாழ்வதற்கு எய்தியவர்.

கர்ணன் 
மனித உடல் இறந்ததற்கு மதிப்பு மரியாதை செலுத்துவார்கள். 
ஆனால் உயிருடன் மனிதன் இருக்கும்பொழுதே மனித உடல் நன்மை செய்யும்
மதிப்பை பெற்றிருந்தால் இறப்பதில் எந்த கடனும் இல்லை.

ஆனால் கர்ணனை வெல்ல அவன் உடல் இறக்கவேண்டும். நன்மை செய்வதுதான்
அந்த வெற்றி.
 
கர்ணன் உடல் இறப்பதற்கு
அவர் அதற்கான மதிப்பை கொடுக்க வேண்டும் அதற்கு
 தர்மமும், புண்ணியமும், அன்பும்
கடன் நிலுவையில் அவருக்கு இருந்ததை
, பிறருக்கு கொடுக்க வேண்டி
இருந்தது.
 
ஆகவே இவ் உலகில் பிறந்த நாம் அனைவரும், மனித
உடலின் இறப்பிற்கான சாதனை
 என்னவென்றால், தர்மம், புண்ணியம், அன்பு
போன்ற நன்மைகளுக்கு உண்டான பங்கை
 செலுத்தியிருந்தால், மனித
உடல் இறப்பின் மதிப்பை பெற்று உடல் பிறந்த
 நோக்கம்
வெற்றிபெறுகிறது.
 

உடலின் இரத்தம் வேலை செய்ய சக்தி அளிக்கிறது. மனதின் இரத்தம் அன்பு
செய்ய
 சக்தி அளிக்கிறது. இது
கர்ணன் இறந்து அவரின் அன்பு இரத்தம் மற்றவரிடத்தில்
 வாழும்
சக்திபெறுவதைபோல். நம் இறப்பு அன்பின் சக்தியை பிறருக்கு
 தந்திடவேண்டும்.

அறிந்த நற்பண்பை
வெளிப்படுத்தவேண்டும். கர்ணன் அந்த நற்பண்பை (உயிர் தரும்
 இரத்தமாக)
பிறருக்கு தந்ததால். அவர் இறப்பு வெற்றிபெற்றது.
 
அறிந்த நற்பண்பை வெளிப்படுத்தவேண்டும். 
அறியாத நற்பண்பை அறிந்திடவேண்டும்.

படம் 

ராமர் வில்லை வளைத்து அம்பை எய்துவார்.
ராமர் சொல்லை அழைத்தும் அன்பை எய்துவார்.

ஆமாம் நீங்கள் படம் பார்த்தீர்களா. 
இப்பத்தான் படம் பார்ப்பது எளிதாக இருக்கிறதே.
என்ன சொல்றீங்க, ஆமாம் கலப்(படம்) பார்ப்பது எங்கும் எளிதாக
இருக்கிறது.

தீங்குக்காக கலக்காதீங்க,
நல்லதற்காக கலந்திடுவோம் , கலக்கலா
இருப்போம்.
 

பாத்திரம் விலக்குவது ஆண்களுக்கு எப்படி 
நல்ல கதாப்(பாத்திரம்) விளக்குவது ஆண்களுக்கு
வேண்டாமா
 


ராமனாக செயல்படுங்கள் 

சர்.சி.வி. ராமன் விஞ்ஞானத்தை ஆராய்ந்து கண்டறிந்தார்.
இந்த ராமனை போல் மனித நல்வாழ்வு விஞ்ஞானத்தை ஆராயிந்து சந்தோசத்தை கண்டறிவோம். 

தெனாலிராமன் வன்முறை கொண்டு கருத்தை
புரியவைக்காமல் புத்தி தந்திரத்தை கொண்டு கருத்தை புரியவைக்கும் புரட்சி
செய்தார்.
இந்த ராமனைப்போல புத்தி தந்திராத்தால் எளிமையாக வாழ்க்கை சோதனைகள் மக்கள்
எதிர்கொள்ள எளிமை புத்தி விருப்ப புரட்சி செய்வோம்.
 

அரச குமாரரான ராமன் காட்டில் 16 ஆண்டுகள் எளிமை வாழ்கை வாழ்ந்தார். ஒரு உயர் பதவி அல்லது அதிகாரத்தில் இருந்தவர் இச்சோதனையை எதிர்கொண்டு ஈகோவை வென்றார்.தற்காலத்தில் மக்கள் குடும்பங்களுக்கிடையே ஈகோ பற்றிக்கொண்டு நிம்மதி இல்லாமல் இருகின்றனர்.

ஆணின் கண்ணில் தெரியும் திருமண எதிர்ப்பார்ப்பு 
மண பெண்ணின் கண், முக்கு, உடல் அமைப்பு போன்றவை. 

இறைவனின் மன கண்ணில் தெரியும் திருமண எதிர்ப்பார்ப்பு 
மன பெண்ணின் கல்வி, வீரம், செல்வம் போன்றவை. 

கல்விக்கு சரஸ்வதி என்றும், செல்வத்திற்கு லெட்சுமி, வீரத்திற்கு பார்வதி என்றும் ஏன் சொல்லப்படுகிறது?

முட்டாள் இறைவன் அழைக்கிறார். ஆம் ஞானமாய் நடவாமையிலே முட்டாளாய் இருக்கிற இறைவன்அழைக்கிறார்

 

மேகம் மரங்களின் மனதை மகிழ்ச்சியால் நனைக்க
மழையாய் இறங்க உத்தரவு கேட்கிறது
அதற்கு மரங்கள் மேகத்தை பொறு என்றும் 
மனிதர்கள் தங்கள் மகிழ்ச்சியை சமமாக என்னிடம் பகிர வில்லை. 
ஆம். மரங்கலாகிய என்னையும் சமமாக கருதவில்லையே 
மேகமே, நீ இறங்க வழியை தர வலி உணரட்டும் மனிதர்கள்.

நலனை கொள்முதல் ஆண்டாக இருக்கட்டும், கொல் முதல் ஆண்டு வேண்டாம். 
எத்தனை வெள்ளி விழா ஆண்டு, பொன் விழா ஆண்டு, வள்ளுவன் ஆண்டு, காலாண்டு, அரையாண்டு கணக்கு எப்படி?

 

 

மனதில் வரைந்தேன் பிள்ளையாரை 

 

மனதில் வரைந்தேன் பிள்ளையாரை

என் மனதில் வளர்ந்திடு வளர்ந்திடு

 

எல்லையில்லா இறைவா 
எனக்கு பிள்ளையானால் 
என் தொல்லைகளோ நீங்கிவிடும் 

( புத்தியுள்ள இரக்கத்தை பெற்றெடுத்தால், பெற்றெடுத்த இரக்கம் நமக்கு பிள்ளையாகவும்,நல்லவைகளுக்கு நாம் பெற்றோராகவும் இருப்போம். இரக்கமாக   உள்ளவர் இறைவன், நாம்அவரையே பெற்றெடுக்கிறோம் ) 

வேப்பில்லையும் பலனளிக்கும் 
நல்ல தென்னம் பிள்ளையும் பலனளிக்கும்
தெய்வபிள்ளையே நீர் என்னை மணக்கச் செய்யும் 
நல்லவனாக மணக்கச் செய்யும் 
( உள்ளத்தின் திருமணம்சுகா(தார) மனம் )

பொன்னாங்கண்ணியும் பலனளிக்கும் 
கரிசலாங்கண்ணியும் பலனளிக்கும்
சுத்த கன்னியை மணக்கச் செய்ய 
தாய் போன்ற கன்னியை நீ தேடினாய் 
ஆற்றவும் தேற்றவும் சொந்தம் கொள்ள 

ஆற்றும் கரையில் நீ அமர்ந்தாய் 
அன்பான(தாய்) உள்ளதை என்னில் கண்டு 
இந்த சாயலின் கன்னி என்னையென்று மணந்திடுவாய் 
என்னில் கலந்திடுவாய் 

( அன்பான(தாய்), பண்புள்ள(தாய்), அருமையுள்ள(தாய்), பொறுமையுள்ள(தாய்),  ஒழுங்குள்ள(தாய்)போன்றவைகள் உள்ளத்தில் அமைந்தால் பிறருக்கு   பலனளிக்கும்.)

எலிகள் சுற்றி சுற்றி விளையாடும் 
என் எளிமை உன்னைச் சுற்றி விளைந்திடும் 
( 
நல்லவைகளை கல்லாமை இல்லாமை என்பது எளிமை, நல்லவைகளை   கற்றவர்கள் ஒரு மனதாகசேர்ந்திருப்பது இனிமையான எளிமை) 

கொலுக்கட்டை போல் பிறருக்கு வீக்கம் என்றால் 
அதன் தேக்கம் அறிந்து சரி செய்வோம் 
கற்களால் வீடு கட்டினாலும் 
நல் சொற்களால் என் உள்ளம் உயிராகும் 
தோப்பு கரணம் தொப்பையின் குப்பை குறையும் 
நல் தோப்புக்கு காரணம் நானுமறிந்து 
சுற்றுபுறத்தாருக்கு நல் உணவை பயிருடுவேன் 
பயிரிட்டு தந்திடுவேன் 

(உள்ளத்தின் உணவுகளான நல்ல புத்தியுள்ள பண்பு என்ற உணவு, நல்ல புத்தியுள்ள சுகாதாரம்  என்றஉணவு)

அருகம்புல் நல் மருந்தாகும் 
உயிரை அறுக்கும் புல்லும் வேண்டாமே 
புல் (Full)
போதையை உதறிடும் மனமருந்து எனக்கு போதும். 

( கெட்ட ஆணவம், கெட்ட பொறாமை, கெட்ட வைராக்கியம், கெட்ட கோபம்   போன்ற போதைகள்) 

இறைவனுக்கு தோடு உண்டு 
தெய்வபிள்ளையான எனக்கு தோடு உண்டு 
நல்லவைகளை கேட்ப(தோடு) – தீமைகளை மறுப்ப(தோடு) 
விருப்பத்(தோடு) அன்பை பெறுதல் நலமளிக்கும் நல்ல இதமளிக்கும். 

 

 

தேன் மது நமது முகமது 
தேன் சிந்தித்தேன் முகமது வாழ்க்கை
தேன் நினைத்தேன் முகமது வார்த்தை
தேன் செய்தேன் முகமது விருப்பம்
தேன் மகிழ்ந்தேன் முகமது அன்பு 


அன்பு கரங்கள் நேசமாட்சி
பண்பு கரங்கள் பாசமாட்சி 
தாங்கும் அன்பு ஏங்கும் பண்பு
உணர்வில் கலந்தாட்சி 
அன்பேதான்
நிம்மதி 
நல் வாழ்க்கைக்கு சம்மதி  அன்பு


அம்மான்னு சொன்னாலும் 
அப்பான்னு
சொன்னாலும் 
அழுகையை
நிறுத்துவார் 

சலுகைக்கு
குறையில்லை 
லாசர்
போல் இறந்தாலும் 
நல்லதை
துறந்தாலும் 

சொட்டு
சொட்டு இரத்தத்தால் 
கண்ணீர்
விட்டு திருத்துவார்  அன்பு

எந்தன் இயேசு
பிரியமே 
சுத்தமான அன்பே 

சாக்கடையின் நாற்றமா 
மலர்களின்
தோட்டமா 
நாற்றத்தை
மாற்றோவோம் 
தூய்மையை நுகருவோம் 

தீமையின்
தோற்றமா 

ஊறுவது
அசிங்கமா 

நெருங்கி
சென்று 
நெருக்கத்தை கொடுப்போம் 
சுத்திகரிப்பை செய்வோம் 
சுத்தமாக மாற்றுவோம்  அன்பு

ராஜ ராஜா

 

ராஜ ராஜா

 

இயேசு ராஜா
மலரச்செய்வேன் மணக்கச் செய்வோம்

சொந்தமாய் அழைத்திட 
என்னையும் தருகின்றேன் (தந்துவிட்டேன்)
ஒப்பந்தம் செய்திடுவோம் (செய்து விட்டோம்)
ஏற்றுகொண்ட ஆண்டவரே 
 
ராஜ 

இயேசுனு அழைத்திட 
இறை(இரை)யே நீர் பேசுமையா
என்னை மீட்க
இறை(இரை)
வேணும்
நலம்பெற பேசுமையா 
ராஜ

ராஜானு அழைத்திட 
அபிசேகம் செய்யுமய்யா
பாவம் வெல்ல அபிசேகியும்
ராஜாவா நானாக 
ராஜாதி ராஜா நீரே 

ராஜ 

அப்பானு அழைத்திட 
தந்தையாக தாருமையா
உயிரும், உயிர்ப்பும் தாரும்
நித்தம் வாழ உயிர்பேச்சு
சத்தம் கேளா விபத்துக்கு 
இரத்தமாக உயிர்ப்பு தாரும் 
ராஜ 

அம்மானு அழைத்திட 
தாயாக சுமந்திடய்யா
என் பாவம் சுமந்துவிடும் 
வளர்த்திடும் ஞானப்பாலில்
வருவேனே நற்பெயரில் 
ராஜ 

மகனேனு அழைத்திட
உம் அன்பை பெற்றெடுப்பேன்
விருப்பத்தை சம்பாதிப்பேன்
ஊரெங்கும் மலரச்செய்வேன் 
ராஜ 

மணவாளன் என்றிட 
பரிசுத்தம் மணக்கச் செய்வேன்
பரிசுத்தம் நானாவேன் 
பரிசுத்தர் நீரன்றோ
உலகெங்கும் மணக்கவேண்டும் 
ராஜ 

ஆசாரியனாக்கிட 
நீர் ஆசாரியாயிருந்து 
திருச்சட்டங்களை கோர்த்து 
வேதங்களை தந்தீர் 
ராஜ 

குணவாளனாக்கிட 
மனச்சத்தங்களை கேட்டு 
குணசுத்தங்களைச் செய்தீர் 
உம் சத்தங்கள் அடங்கிய 
நூல்கள் வேண்டும் 
ராஜ 

சிவன் – பார்வதி 

பணிவிடை குணத்தை
அசட்டைபண்ணும் ஆளுமை திறன் மட்டும் இருந்தால் ஆணவம்
 பிடித்தவர் ஆவார்.
உள்ளத்தால் ஆணவம் பிடித்தவர் ஆணாகவோ
, பெண்ணாகவோ இருக்கலாம்.

ஆளுமை குணத்தில் அசட்டையாக இருந்து பணிவிடை குணம் மட்டும் இருந்தால்
மலடு
 ஆவார்.
கருவுக்கு காரணம் ஆகாததைபோல எந்த ஒரு செயலையும் சரிவர செய்ய
 இயலாது. உள்ளத்தால் இந்த மலடின்
குணம் ஆணாகவோ
, பெண்ணாகவோ
இருக்கலாம்.
 

நல்ல ஆளுமை திறனும், நல்ல பணிவிடையும் ஆன நற்பண்புகள் ஒரு மனமாக ஒன்று சேரும்போழுதுதான் இருவருக்கும்
மகிழ்ச்சியான நல்ல செயல் நடைபெறும்.

ஒரு செயலை செய்ய தெரிந்த ஆளுமையும் அதை செயல்படுதிடும் பணிவிடையும்
ஒன்று
 சேரும்போழுதுதான்
அச்செயலை செய்யமுடியும்.

ஆளுமை ஒரு காரியத்துக்கு உயிர் அணு போன்றது. பணிவிடை ஒரு
காரியத்துக்கு உயிரை தாங்கக் கூடிய கருமுட்டை போன்றது. இவை உறவு பெறும்பொழுது
காரியம் பெற்றடுக்கப்படுகிறது. இறைவன் தமது சாயலாக மனிதனை உருவாக்கினார்.
 அம்மனிதனை ஆணும், பெண்ணுமாக ஒரு
குடும்பமாக உருவாக்கிய இறைச்சாயல் என்பது ஆண்மை
, பெண்மை ஓர் அன்பு உடல் காட்சியாக
தோற்றமளிக்கும் சிவன் பார்வதி சேர்ந்தே தோற்றமளிக்கும் காட்சி விளக்குகிறது.

உள்ளத்தில் நல்ல புத்தியுள்ள இரக்கத்தின் ஆளுமைத்திறனும், நல்ல புத்தியுள்ள இரக்கத்தின்
பணிவிடைதிறனுக்கும் உறவு பாலமாக மற்றவரோடு உறவு
 சேர்ந்தால் சிவன் பார்வதி அன்பு
காட்சியைபோல் அன்பு தனித்திராமல்
 சேர்ந்திருக்கும். 

மலட்டு அன்பும், ஆணவ அன்பும் வேண்டாம். பூரண அன்பின் செயலால்
எதிர்கால சந்ததிகள் பிறப்பிலும்
, உள்ளத்தின் செயலிலும் நல்ல ஆரோக்கியமுள்ள
சந்ததிக்கு வழிவகுப்போம்.
 
தற்பொழுது குறைவோடு இருந்தால் நாமும் பூரண அன்பிக்காக மாற்று திறன்
வழிகளை
 எடுத்துகொள்வோம்.

யாத்திரை
நல்ல கோப கருணையின் பாதையில் யாத்திரை செய்வோம். 
நடராஜனின் நடவடிக்கையில் நடங்கள் அது 
கருணையின் பாதை
அப்பாதையில் யாத்திரை செய்தால் அது நல்ல பாதை யாத்திரை.

ஆறுமுகம், திரித்துவம் 

ஒரு சதுரத்திற்கு எத்தனை பக்கங்கள், சதுரம், கன சதுரம்

ஒரு இறைவனுக்கு எத்தனை பக்கங்கள் ஆம் முருகன், இயேசு, அல்லா

ஒரு சதுரத்தின் ஒவ்வொரு பக்கங்கள் ஆன ஒவ்வொரு முகமும் அளவில் ஒன்றாக இருக்கணும்.
ஒரு இறைவனுக்கு ஒவ்வொரு பக்கங்கள் ஆன ஒவ்வொரு முகமும் நிலைப்பதில் ஒன்றாக இருக்கணும். 

அன்பு என்ற குணத்தில் தந்தையாகிய
இறைவன், தாயாகிய இறைவன், நண்பனாகிய இறைவன், சகோதரத்துவ இறைவன், ஆசிரியரான 
இறைவன், குருவாகிய இறைவன். அன்பே இறைவன். 

ஒரு கட்சிக்கு எத்தனை ஓட்டுக்கள் பெரும்பான்மையான வாக்களர்களின் ஆதரவு ஒரு பிரதமர் 
ஒரு அன்புக்கு எத்தனை ஓட்டுக்கள் பெரும்பான்மையான நல்ல குணங்களின் ஆதரவு ஒரு இறைவன் அது 
தந்தையாகிய இறைவன், தாயாகிய இறைவன், நண்பனாகிய இறைவன், சகோதரத்துவ இறைவன்,ஆசிரியரான இறைவன், குருவாகிய இறைவன் போன்றோர். 

கணக்கு பெருக்கலில் 1 x 1 x 1 x 1 x 1 x1 = 1 என்பதை எப்படி விளங்குகிறதோ அதுபோல் ஒரே இறைவன்

 

இரக்கம்

பழிக்கு பழி செய்யும் இருவரில் யாரோ ஒருவருக்கு தன்னுடைய நிலையான கருத்து பலியாக்கப்படுகிறது. 

ஆனால் இரக்கத்தில் பரஸ்பரம் ஏற்பட்டு தங்கள் நிலையான இரு கருத்துக்களும் 

இடம், பொருள், ஏவல் அறிந்து உயிரூட்டப்படுகின்றன. யாராவது ஒருவர் இரக்கம் செய்தாலும் போதும்.

 

மதம் ஏன்? சோம்பல் ஏன்?
மதங்கள் பல இருப்பதனால்தான் கடவுளுக்கான பல
கேள்விகள் பிறக்கின்றன
 
கேள்விகள் பல இருப்பதனால்தான்
 
கடவுளுக்கான ஞானத்தை அறியும் வழிகளை அறிந்து
உலக அஞ்ஞானத்தை வென்று நீண்ட சந்தோசத்தை பெறுவோமோ.
எல்லா மதங்களும் நிறைவானவையே,
 

அதில் குறைவு என்று நம்முடைய குறைவால் மதிப்பிடுவது 
அதன் நிறைவுக்கான பணி நம்மிடம் விடப்பட்டுள்ளதா?

 

தர்மம்
இந்து தர்மத்தில் கற்பூரம் காட்டபடுவது என்பதோ பேச்சிலும், செய்கையிலும், 
நடக்கையிலும் கற்பின் பூரணத்தை காட்டவேண்டும் என உணர்த்தும் அடையாளம். 
இந்து தர்மத்தில் தெய்வத்திற்கு நல்லெண்ணெய் விளக்கு ஏற்றப்பட வேண்டும்
என்பதோ
 தெய்வத்திடம் நல்லெண்ணமுள்ள விளக்கங்களை ஏற்று அதன்படி
செயல்பட
 வேண்டும்.

இந்து தர்மத்தில் பூநூல் அணிவது என்பதோ மனதில் பூக்கும் வேதநூலான பூநூலை 
மற்றவர் அறியும்படி அணிய வேண்டும். 
கிறிஸ்துவத்தில் இரண்டு விதமான கேளுங்களும், தட்டுங்களும், தேடுங்களும் இருக்கின்றன நீங்கள்அறிவீர்களா நன்மை சொல்வதை செவி கொடுத்து கேளுங்கள். தீமையிலிருந்து விடுவிக்கும் வழியை வாய்
திறந்து
 கேளுங்கள். உள்ளே புகுந்திடும்படி நன்மை கதவை தட்டுங்கள் திறக்கப்படும். வெளியில் வரும்படிதீமை கதவிலிருந்து தட்டுங்கள் திறக்கப்படும். நன்மை செய்ய உள்ளே நுழைய வழி தேடுங்கள் கிடைக்கும்.தீமையிலிருந்து வெளியே வர வழி தேடுங்கள் வழி கிடைக்கும்.

இஸ்லாத்தில் நோன்பில் ஏழைகளுக்கு உதவுவது என்பது தமது சொத்தான நல்ல நீதி, புத்தியுள்ள இரக்கம்,நல்ல அன்பு போன்றவை இல்லாத அல்லது குறைந்த ஏழைகளுக்கு வழங்கி சந்தோசமடைவார்கள். நல்ல நீதி,புத்தியுள்ள இரக்கம், நல்ல அன்பு போன்றவைகளுக்காக தங்கள் பொருள், பணம்
போன்றவற்றை முதலீடு செய்வார்கள்.
 
இலவசமான ஈகையாக. 

சிலர் பொருள், பண வசதியுடன் இருப்பார்கள்
ஆனால்
, தங்கள் நல்ல நீதியிலும், புத்தியுள்ள இரக்கதிலும், நல்ல அன்பிலும், நல்ல
தணியும் கோபத்திலும்
 ஏழைகளாக இருப்பார்கள். ஊதாரியாய், ஊனனாய்
பிச்சை பெறுபவருக்கு பணமும்
, 
திருந்துவதற்கான நல்ல கல்வி, புத்திமதி, மாற்று
திறன் வழிகளுக்காக தம்
 அறிவு, ஞானம், பணம், பொருள்
தேவை.
 ஏழைகளுக்கு பணத்தை மட்டும் தந்தால் போதாது
அதை நல்வழியில் பயன்படுத்துவதற்கான நல்ல அறிவு வேண்டும்.
 

நல் அறிவை வழங்காவிட்டால் நாம் பண வீக்க
காரணத்திற்கான குற்றவாளி.
 பலசாலியான ஒருவரிடம் நமக்கு உதவி தேவைப்பட்டால்
அவர் நம்மீது கோபம்
 காட்டுவது நல்லதா, இரக்கம் காட்டுவது நல்லதா. இரண்டுமே
வேண்டும். நாம்
 கவனமாக அவ் உதவியை பெறுவதற்கு பொறுப்புள்ள புத்தியுள்ள அவர் கோபமும், நம்இயலாமையை சரிகட்டும் அவர் இரக்கமும் தேவை. பழிக்கு, பழி
செய்தால் நிம்மதி
 கெட்டுவிடும். உலகம்
பாதுகாப்பின் நம்பகம் கெட்டுவிடும்.
 பழிக்கு, பழி எளிதில்
நடந்து விடாமல் இருபதற்காகத்தான் கட்டுபடுத்த காவல் துறையும்
, சட்டங்களும்
உள்ளன.
 மன சாட்சியும் உள்ளது. நாட்டை காப்பாற்ற இராணுவம் இருப்பதுபோல்.
பெரும்பான்மையின் நன்மைக்கு தகுந்தால் போல்தான்
பழிக்கு
, பழி இருக்காலாம இரக்கமாக அதற்கு அறிவை பயன்படுத்துவது நல்லது. 

 

எறும்பு 
எறும்புக்கு வெளி அலங்கார ஆடை இல்லை ஆனால்
நாம் ஆடை அணிந்தும் நமுக்குள்
 எத்தனை கற்பழிப்பு வழக்குகள், கள்ள
காதலர் கொலை வழக்குகள் அன்பு குணத்தில் இந்த பிரச்சனையை
 எந்த கட்டுப்பாட்டில்
எறும்புகள் ஒழுங்குபடுத்துகின்றன
?

நம் உடல் ஆடையின்றியிருந்தால் பிறர் நம்மை அவமானமாக கருதுவார்கள் என்கிறோமே. 

உள்ளத்தில் தீங்கை வைத்துக்கொண்டு அதை செயலாக வெளிப்படுத்தினால் நல்லதை பிறருக்கு நிர்வாணமாக காட்டுகிறோமே அது அவமானமாக இல்லையா?

 

ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவை பெருகுவதற்கு என்ன செய்கிறோம். இவைகள் இறைச்சிக்காகவும், பல நன்மைக்காகவும் இதன் தேவையை நம்பியிருக்கிறோம். இவைகள் பல ஆண் இனத்தோடும், பல பெண் இனத்தோடும் இணைந்து இனப்பெருக்கம் செய்து
பலுகுகின்றன.
 இவைகள் ஆண், பெண் இன விருத்திக்கு ஒன்றுக்கு, ஒன்று என்ற விகித்தத்திலா உள்ளன. அவ்வாறு இல்லையே
அதற்காக இவைகள் விபச்சாரம் செய்கின்றன என்று சொல்ல முடியுமா
? 
அப்படி சொல்லி அவைகளால் பலன் நமக்கு வேண்டாம் என்று ஒதுங்கிட முடியுமா
? நாம் ஆறு அறிவு என்றும், மிருகத்தைப்போல் நாம் அப்படி நடந்துகொண்டால்
விபச்சாரம் என்று எப்படி சொல்கிறோம்.
 ஆனால்
நமக்கில்லாத மோப்பம் போன்ற சில நுட்பமான உணர்வு சக்திகொண்ட
, நாமாகவே அறிவை குறைத்து தீர்ப்பிடுகின்ற விலங்கு, மீனை தேவைக்காக நம்பியிருப்பது ஏன்? 

மனிதரில் ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ ஒன்றன் பின், ஒன்றாக கணவனோ, மனைவியோ
இறந்தால் அதை சரிகட்ட எத்தனை பேர் வேண்டுமானாலும் கணவனனாகவோ
, மனைவியாகவோ இருக்கலாம். ஆனால் கால கட்டாயத்தில்
ஒருவருக்கு பல மனைவியோ
, கணவனோ இருந்தால் தவறா? இறந்ததனால் பல கணவன், மனைவி இருப்பதும், உயிரோடு இருப்பதால் பல கணவன், மனைவி
இருப்பதில் எப்படி நல்லது
, கெட்டது என்று பிரிப்பது.

மனிதன் உலக நியதிக்கு முக்கிய பங்கு
வகிக்கிறார்கள். ஆகவே இப்பொழுது உள்ள மக்கள்
பெருக்கத்திற்கே இயற்கை பாதுகாப்பை ஒழுங்கு படுத்தமுடியாமல் சீர்குலைத்து
இருக்கவேண்டியுள்ளது.
 தம் வாழ்வாதார தேவையை
சீர்குலைத்தே பயன்படுத்துகிறோம். விரலுகேற்ற வீக்கம்போல்
, நாம் ஒருத்தருக்கு ஒருவர் என்று ஆண், பெண் திருமணம் செய்துகொண்டால் புரிந்துகொள்வதிலும், மிகச் சிறப்பாக தங்கள் தேவையை பெற்றுகொள்ளவும்
முடியும்.
 ஆனால் இந்த ஒருத்தருக்கு
ஒருவர் என்று நிலையிலே பெரிய
, பெரிய
பிரச்சனைகளும் நடைமுறை காலத்தில் வருகின்றன.
 

ஒன்றுக்கு ஒன்று, ஒன்றுக்கு
இரண்டு
, ஒன்றுக்கு ஆயிரம், பலருக்கு பல என்று ஆண், பெண் இல்லற துணைகள் பெருகிக்கொண்டே போனால் சில
பகிர்வில் சிறப்பும்
, சில நோக்கில் சிக்கலும்
உள்ளது.
 தசரதனுக்கு ஆயிரம் மனைவியாம், சாலமனுக்கு பல துணைவியாம், ஆபிரகாமுக்கு
இரண்டு இல்லற துணைவியாம் சிக்கல் இதுவல்ல. நடைமுறையில் ஒன்றுக்கு ஒன்று இல்லற
துணைகள் மிக நல்லது என்றால்.
 பல
இல்லற துணைகள் இருப்பது குறைவான நல்லது. அவ்வளுவுதான்.
 நாம் திடீர் என்று அதிகமாக பெருகினால் நம் தேவையை
சமாளிப்பது கடினம்
, ஒரு நல்ல பகிர்வு
கணக்கிற்காக ஒருத்தருக்கு
, ஒரு இல்லற துணை.
அவ்வளவுதான்.
 

சிக்கல் என்னவேன்றால், எத்தனை நல் அன்பை விபச்சாரம் செய்தோம், எத்தனை நல் கோபத்தை விபச்சாரம் செய்தோம், எத்தனை நல் இரக்கத்தை விபச்சாரம் செய்தோம், எத்தனை நல் அறிவை,
நல் கல்வியை
, நல் அனுதாபத்தை, நல் வேண்டுகோளை சுற்று சூழலுக்கும், பிற மனிதர்களுக்கும் விபச்சாரம் செய்கிறோம்.
இதனில் கவனத்தை கொண்டு விபச்சாரம் செய்யாமல் நன்மையை பெருக்குவோம்.

 

சுபச்சாரம் 


சாரம்
என்பது மையக்கருத்து என்ற பொருளை குறிக்கும் அர்த்தம் ஆகும்.
 இதைச் சார்ந்துள்ள சில சொற்கள் அபச்சாரம், விபச்சாரம், கீதாச்சாரம், மின்சாரம், சம்சாரம். அபத்தத்தை குறிக்கும் சாரம் அபச்சாரம். பகவத் கீதையின் சாரம் கீதாச்சாரம். 

விபத்தின்
சாரத்தை குறிக்கும் கருத்துதான் விபச்சாரம்
. 
பொருளாசை
என்ற விபச்சாரம் என்றால் தீமையின் பொருள்பட ஆகும் ஆசையின்
 விபச்சாரம். ஆகவே விபச்சாரம்செய்யாதிருக்க வேண்டும். வாழ்க்கை போக்குவரத்தில் விபத்து. போகும் நோக்கத்தில் விபத்து. மக்களின்நெருக்கம் (அதாவது துன்பம்) விபச்சாரங்களின் பெருக்கம். 

மனித உறவில்
இரண்டு வகையான விபச்சாரங்களை தவிர்ப்பது நல்லது. ஒன்று உடல் உறவில், மற்றொன்று
மனதின் உறவில். மனதின் உறவுகளான நல் அன்பு, நல் பண்பு, நல் கல்வி,
நல்
ஆரோக்கியம் போன்றவைகள். இவற்றில்
தகாது உறவு விபச்சாரம். இயற்கை
சுற்று சூழலளுக்கான ஒழுங்கை பராமரிக்காமல் இருக்கும் தகாத உறவும் விபச்சாரம்தான்.

பாதுகாப்பின்
அதிகரிப்பு எதிர்ப்பு சக்தியின் அதிகரிப்பு.
 விபத்துக்களை தவிர்க்க. வாழ்வு பயணத்தின் துன்ப இரைச்சல்களை கேட்டு நில், கவனி, செல் விபத்தை தடுப்பதற்கான உதவி குழுமங்களையும் ஏற்படுத்தி கொள்வோம். 

விபச்சாரங்கள்
சிலவற்றின் கருத்தை அறிவோம்.


வறட்சியின்
சாரம்
  பசுமைக்கு விபத்து 

துர்நாற்றத்தின்
சாரம்
 
 
சுத்தத்தில் விபத்து 

பொறுப்பற்ற
பேச்சின்
 சாரம்  பொறுப்பில் விபத்து

சண்டையின்
சாரம்
 
 
சமாதானத்தில்
விபத்து
 

கூக்குரலின்
சாரம்
 
அரவணைப்பில் விபத்து

அசிங்கத்தின்
சாரம்
 
மேன்மையில்
விபத்து
 

திருட்டுத்தனத்தின்
சாரம்
 
அக்கரையில்
விபத்து

விபச்சாரியின்
சாரம்
 
ஒப்படைப்பில்
விபத்து

வேசியின்
சாரம்
 
பிரவேசியில் விபத்து

தீமை
தூண்டுகோலின் சாரம்
  நல்ல அடக்கத்தில் விபத்து

வேண்டுகோலின்
சாரம்
  தேவையில் விபத்து 

பணவீக்கத்தின்
சாரம்
  நற்குணத்தில் விபத்து 

இம்சையின்
சாரம்
  அகிம்சையில் விபத்து

ஆணவத்தின்
சாரம்
  பணிவிடையில் விபத்து

சுயநலத்தின்
சாரம்
  பொதுநலத்தில் விபத்து 

பாமரரின்
சாரம்
  படித்தவர்களுக்குள் விபத்து 

வேலையின்மையின்
சாரம்
  அனுபவ பகிர்வில் விபத்து

தண்டனையின்
சாரம்
 
விடுதலையளிப்பதில் விபத்து

நோயின் சாரம் ஆரோக்கியத்தில் விபத்து.


இந்த
விபச்சாரங்கள் சுபச்சாரங்களானால் சுகச்சாரங்கள் உண்டு
.

 

 

தாய் நாடு –  தேச தந்தை

 

மனிதர் குலத்திற்கு தாய், தந்தைஎன்று இறைவனை குறிப்பதை
பல கணவனோ,
பல மனைவியோ உண்டா இறைவனுக்கு, என்ற குழப்பம்.பல சக்திகளின்    ஒருங்கிணைப்பில்
இறைவன் இருக்கிறார். ஒரு பெரிய காந்தம். பல காந்தங்கலாக
உடைந்தாலும்.
உடைந்த ஒவ்வொரு காந்த துகளும்
தனித்த காந்த மாக விளங்கும். உடைந்த காந்தங்கள்
ஒன்று சேர்ந்தாலும் ஒரே காந்தமாக
இருக்கும். இறை சக்தியின்
பல துணைகளை பல துணைவியர்
அல்லது பல துணையாளர். இறைசக்தியின் ஒருமித்து
சொல்வதே அன்பு.
அன்பே சிவம்,
அன்பே தேவன்,
அன்பே இறைவன்.

நாம் பிறக்கும்பொழுது
நிர்வாணியாய்
பிறக்கிறோம்ஞானம்புத்தி போன்றவை
பிறக்க
காரணமாக
இறைவனும்மனிதர்களும் உள்ளனர்இறைவனுக்கு முதலிடம்
கொடுத்து
ஞானம்புத்தி இவைகளுக்கு
இறைவனை
முதல்
தந்தையாகவும்மற்ற கணவன்மார்கள்மனைவிமார்கள் இவர்களின்
இணைப்பில்
பிறந்தவர்களுக்கு
காரணமானவர்களை
இரண்டாம்
பெற்றோர்
ஆவர்.

இவ் உலகில் ஞானதந்தைதேச தந்தை
என்று
சொல்லிகொள்வதும்
உண்டு.

மனதிற்கு இரத்தமாக இருப்பவைகள்
எண்ணங்கள். எழுத்துகளில் உயிர் இருப்பதை உயிரெழுத்துமெய் எழுத்து என்று அறிவதைப்போல்,
மனதின் உயிர் இரத்தமாக,
அறிவுக்கு உயிர்
இரத்தமாக நல் உணர்வுகள் உண்டு என்பதை புரிந்து கொள்ளலாம். உடல்    உயிரோடு
இருக்கும்பொழுதே மனசு செத்துவிட்டது என்று ஏன்
சொல்கிறோம். மனம்
உயிரடைவதற்கு என்ன வேண்டும். கம்ப்யூட்டர் மொழிகளில் parent property ,
child property என்பதை புரிந்து கொள்கிறோம்.

கம்ப்யூட்டரின் தந்தை,
பகுத்தறிவின் தந்தை என்று சொல்லபடுவதை
எப்படி விளங்கிகொள்கிறோமோ அதுபோல் பரலோக தந்தை. பரலோக தந்தை   நல்ல குணங்களுக்கு
தந்தை என்றும் சொல்லலாம்.

ஐந்து முறை தொழுவது போல் ,
நம் உடல், உயிர் பஞ்சபூதங்களும்உலக பஞ்சபூதங்களும் ஆன ஐந்தின் ஒழுங்கு   முறைக்கு
தொழுவோம்.

இஸ்லாத்தின் அன்னை, பராசக்தி
அன்னையை யை ஏன் அன்னை என்று ஏற்றுக்கொள்ளக்கூடாது.

தாய் நாடுதாய் மொழிதாயகம்பூமித்தாய்என்று பொதுவாக கூறப்படுவதன்   காரணம் என்ன?

 

ஆறுதல்
எந்த ஒரு கேள்வியையும் கோபம் என்ற குணத்திற்கு ஒப்பிட்டால்

அதற்கு பதிலாக அமைவதை ஆறுதல் தரும் இரக்கத்திற்கு ஒப்பிடலாம்.
கொலை
செய்வாள் பத்ரகாளி

யாரை கொலை செய்வாள், பக்தர்களில் தீய சோம்பேறியை, தீய ஊதாரியை, தீயபொறாமைக்காரரை, தீய வஞ்சனை செய்வோரை, தீய இரக்கமுள்ளவரை போன்றோரை கொலை செய்யமாட்டாள், அவர்களிடம் உள்ளதீய சோம்பல், தீய ஊதாரித்தனம், தீய பொறாமை, தீய வஞ்சனை, தீய இரக்கம் போன்ற குணங்களையேகொலை செய்வாள். பக்தர்களுக்கு பத்ரகாளி அருள்தானே செய்யமுடியும்.

ஆண்டியானவரான
பழநியப்பன் அருள்
 செய்வார் 

அவர்
பக்தர்களிடம் உள்ள தீய சோம்பலை
, தீய ஊதாரித்தனத்தை , தீய பொறாமையை, தீய வஞ்சனையை, தீய இரக்கத்தை, தீய கோபத்தை, தீய ஒழுங்கின்மையை ஆண்டியாக்கி அருள் செய்வார்.
அந்த
 பழநியப்பன் நமக்குள்
நல் அன்பை
, நல்ல சிந்தனைகள், நல்ல பகுத்தறிவு செயல்கள், நல்ல பொறுமை, நல்ல பாசம் போன்ற கனிகளான பழங்களை விளையச்செய்யும் அருள் செய்வார்.

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக்கூலி தரும். என்ற திருக்குறள் வழியாக
தெரிந்துக்கொள்வது
, தெய்வத்தால் ஆகாது என்றால் தெய்வத்தாலேயே முடியாது
என்று அர்த்தம் அல்ல
? தெய்வம் நமக்கு
தேவையான அனுபவ சூழல்கள் தந்துவிட்டார்.
 இனி அவர் செய்யவேண்டிய வேலை
இல்லை.
 நாம்
முயற்சித்து செயல்படவேண்டியாதே பாக்கி (பெண்டிங்
 pending ) இனி அவரால் ஆகாது
என்பதுதான்.

தெய்வத்தால் ஆகாது என்ற அர்த்தமாக இருக்கலாம்.

சுமை சுமப்போரே என்னிடம்
வாருங்கள். என் நுகம் இனிது? சுமை இனிது? நான் உங்களுக்கு
இளைப்பாறுதல் தருகிரேன் என்று இயேசு சொல்லிவிட்டு இயேசு சிலுவை
 பாடுகளை
பட்டரே
? இந்த சுமையும், நுகமும் ஏசுவுக்கு இனிதா? இத்தகைய பாடுகளோ, இதைவிட
அதிக பாடுகளோ நமக்கு வருமானால் நம்முடைய நிலை என்ன
? அத்தகைய சுமைக்கும், நுகத்திற்கும்
நமக்கு இனிதாவது எப்படி
? நாம் வலியை தாங்கிக்கொள்வதில் திறமையை வளர்க்கனுமா? வலி
ஏற்படும் காரணங்களை குறைத்துக்கொள்ளும் திறமையை வளர்த்துக்கொள்வதில்
 திறமையை
வளர்க்கனுமா
? எத்தகைய
வலியை வென்று நீடித்த சந்தோசத்தை பெறுவோம்
? வேண்டிய நீடிய பொறுமையான
வலியை ஆளுவோம்
?
நன்மை செய்ய முடியும் என்ற திறமைக்கு எல்லை இவ்வளவு குறைவுதானா? அல்லது இவ்வளவு திறமைஅதிகம்தானா? 

தீமை செய்ய மாட்டேன் என்ற திறமைக்கு எல்லை இவ்வளவு குறைவுதானா? அல்லது இவ்வளவு திறமைஅதிகம்தானா?

இயேசு பாடுபட்டார் சிலுவையில் அறையப்பட்டார். இந்த வேதனைகளைவிட அவர்
பரிதவித்த வேதனை என்னவென்று அறிவீர்களா.
 பிதாவே இவர்களை மன்னியும், ஏனனில் இவர்கள்
செய்வது இன்னதென்று தெரியாதிருக்கிறார்கள் என்று தம்மை சிலுவையில் அறைய
 காரணமாக
இருந்த நற்செயல் அறியாதவர்களின் நிலைகண்டு கலங்கினார்.
 இயேசு, சரீரத்தையல்ல ஆத்துமா
கொல்லப்படாமல் இருக்க
 கவனமாக இருங்கள் என்று சொல்வதை தமது செயாலால்
வாழ்ந்துகாட்டினார்.

 

தெய்வத்தால் ஆகாது எனினும்
முயற்சி தன் மெய்வருத்தக்கூலி தரும். என்ற திருக்குறள் வழியாக
தெரிந்துக்கொள்வது
, தெய்வத்தால் ஆகாது என்றால் தெய்வத்தாலேயே
முடியாது என்று அர்த்தம் அல்ல
? தெய்வம் நமக்கு தேவையான அனுபவ
சூழல்கள் தந்துவிட்டார்.
 இனி அவர் செய்யவேண்டிய வேலை
இல்லை.
 நாம் முயற்சித்து செயல்படவேண்டியாதே பாக்கி
(பெண்டிங்
 pending ) இனி அவரால் ஆகாது என்பதுதான். தெய்வத்தால்
ஆகாது
என்ற அர்த்தமாக இருக்கலாம். நாம் செய்யவேண்டிய முயற்சி தெய்வத்தால்
 
ஆகாது. அவர் நமக்கு காட்டும் தெய்வத்தின் முயற்சி ஆகிவிட்டதானால்.

மருத்துவர் 

குடும்பத்தில் சண்டை, மற்றவர்களிடத்தில் சண்டை
ஏற்படுகிறதே?
ஆரோக்கியத்திற்கும், நோய்க்கும் சண்டைவரும் நோயை வென்றதும் நல்ல நிலைமை என்கிறோம்
.

உடலுக்கு கேடாக ஜலதோஷம், இருமல், தலைவலி, ஜுரம், சர்க்கரைநோய், பிரஷர், குஷ்டம்
போன்ற
 வியாதிகள் வருகிறதே அதைபோலத்தான் மனதிற்கும் ஒழுக்கக்கேடு  வருகிறது. உடல் கேட்டிற்குவரும் நோயை நலமாக சரிப்பண்ணும் தீர்வுகளைபோல் குடும்பத்தில் சண்டை, மற்றவர்களிடத்தில் சண்டைபோன்ற மன அறிவின்மை   நோயை நலமாக சரிப்பண்ணும் தீர்வுகள் உண்டு. எதிரி
மனிதர்
 அல்ல, அவர்கள் கெட்ட குணங்களே எதிரி அதை நல்ல குணமாக சரிப்பண்ணும் மருத்துவபங்கை நாம்கொடுக்கும்பொழுது நல்ல தீர்வை பெறலாம். நீண்டநாள் ஒருவருக்கு கெட்ட குணம் இருந்து கொண்டே இருக்குமானால் அது நீண்ட நாள் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வதுபோல் நாம் நடந்து கொள்ள வேண்டிய குணம். 

மனதில் ஒழுக்கக்கேடு நோய்வரும்போழுது மறைமுகமாகவோ,
நேரிடையாகவோ மற்றவருக்கும், அவருக்கும் நிம்மதி இழப்பு வருகிறது. ஞானமின்மை,
புத்தியின்மை, நல் அறிவின்மை, கெட்ட அன்பு, கெட்ட சந்தோசம், கெட்ட
 
சிந்தனை, கெட்ட செயல்பாடு, கெட்ட சமாதானம், கெட்ட நீடியபொறுமை, கெட்ட தயவு,
துர்குணம், கெட்ட நம்பிக்கை, கெட்ட பொறுப்பற்ற கோபம், கெட்ட சாந்தம், கெட்ட
 
இச்சையடக்கம், கெட்ட வீண் புகழ்ச்சி, கெட்ட இரககம், கெட்ட சோம்பல், கெட்ட
ஊதாரி போன்ற பல பொல்லாத இருதய சிந்தனை, இருதய செயல்பாடு நோய்கள் உள்ளன.

இந்த மன ஒழுக்கக்கேட்டு நோய்களுக்கு மருத்துவ பங்களிப்பு, மருத்துவ வளர்ச்சி,   ஆபரேஷன், பலவித டெஸ்டுகள் இன்னும் தீர்வுகாணாதவைகளுக்கும் தீர்வுகாணுவோம் மனித நிம்மதி, சாந்தம் ஜெயம்பெறுவோம்.

 

கொலை 
சிவன், பார்வதி, முருகன் போன்றோர் மக்களுக்கு தீமை செய்த தீயவர்களை கொன்றார்கள் என்றும்,
கொலை செய்வது பாவம் என்று வேதம் சொல்கிறதா? சைவம், அசைவம் என்ற பிரிவினையா? 

சிலுவையில் தம்மை கொலை செய்யாதபடிக்கு இயேசு ஏன் தப்பித்துக் கொள்ளவில்லை? 

முகமது நபி தன்னை கொல்லவந்தவர்களிடம் இருந்து தப்பித்துக்கொள்ளவில்லையா? 

தன் புத்திமதிகளை எற்றுக்கொள்கிற பாவிகள் இனி பாவம் செய்வதில்லை என்று இயேசு கற்பித்திருக்கிறாரா? 

இயேசுவாகிய தம்மை கொலை செய்வதால் பாவத்திற்குள்ளாகும் பாவிகளுக்கு இயேசு தம்முடைய புத்திமதியால் வெற்றிபெறவில்லையா? 

ஏன் தன்னை கொலை செய்வதனால் பாவிகள் ஆகும்படி அப்படியொரு சந்தர்ப்பத்தை 
கொடுத்ததுபோல் இருக்கிறதா? இல்லையே பிதாவே இவர்களை மன்னியும் என்றல்லவா 
வெளிப்படுத்தினாரா?

நாட்டை காப்பாற்ற ராணுவத்தில் எதிரியை கொன்றால் வீரம். நாட்டு மக்களுள் 
யாரேனும் தன்னுடைய நலனுக்காக மற்றவரை கொன்றால் கொலை அது குற்றமா?

ராணுவ வீரர் கொன்றால் வீரம். திருடன் கொன்றால் கொலையா? 

இயேசுவின் புத்திமதி இன்னும் 
வாழ்ந்துக்கொண்டிருகிறதா? அவரின் பெரும்பான்மையான நற்குணம் கொலை 
செய்யப்படவில்லையா? சிலுவையில்தானே கொலை? தீமை விழுங்கப்பட்டுள்ளதே 

ராணுவ வீரர் 
பெரும்பான்மையானவரின் நன்மைக்காக அவர் செய்த சரியான கொலை வீரம். 
சமுதாயத்திற்கு தீமை செய்யும் திருட்டை ஊக்கப்படுத்துவது தவறு அதனால் 
செய்யப்படும் திருடன் செய்யும் கொலை குற்றம். 

முன்னுரிமையை பொறுத்து 
குற்றங்கள் கணிக்கப்படுகின்றன. உடல், உயிர், ஆத்மா, தனி ஆள், பிறர், 
பொதுமக்கள் என்று நலன் கருதி பிரத்தியோகமானதிற்கு தகுந்தால் போல் 
கவனிக்கப்படுகின்றன. இப்படி வரிசைப்படுத்தி பெரும்பான்மையான நன்மைக்கு 
முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 

சரியான இடம், பொருள், ஏவல் அமையும்படி செயல்கள் அமைய அதன் போராட்டதிற்கான சண்டையில் வெற்றிபெறுவது நியாயமே. 

அசைவமான மருந்துகளை அறியாமலே சைவ விரும்பியோர் தன் நலன் கருதி எடுத்துக்கொள்ளவில்லையா?
அசைவம் என்கிறோமே அதில் உயிர் சத்துக்களை உணவாக்கிகொள்கிறோமா? விஷத்தை எடுத்துக்கொள்கிறோமா? 

உடலால் இறந்தாலும், உயிர்ப்புக்கு அதிகாரி இறைவன், காலத்தால் நீதிக்காக அனைத்தும் ரிமோட் கன்ட்ரோல் போல் கவனிக்கப்படுமே? 

 

இரக்கம் 

திருடன் திருட்டுக்காக ஒருவரை கொலை செய்தால் அது குற்றமா? அதற்கு தண்டனை உண்டா?

திருடன் திருடாமல் இருப்பதற்கான சமூக காரணங்களை யார் கொலை செய்தார்கள்? அவருக்கு தண்டனை உண்டா?

திருடனுக்கு கிடைப்பது கிடைத்துவிட்டால் ஏன் திருடுகிறார்? நல்ல அன்பு திருடனாக மாறுவதற்கு உதவி செய்யாதே?

ஏன் அந்த நல்ல அன்பு திருடனாக மாறியவருக்கு கிடைக்கவில்லை?

திருட்டு, சுற்றுச்சூழல் கேடு 
போன்ற குற்றங்கள் மலிந்து கிடைக்காதிருக்க அதன் விழிப்புணர்வை கொலை செய்தது
யார்? ஏன் குற்றங்கள் மலிந்து கிடக்கின்றன?

தீவிரவாதத்திற்காக எப்படி மனிதர்கள் மூளைச்சலவையும், பயிற்சியும் கொடுக்கப்பட்டு தீவரவாதத்திற்கு ஒன்றிணைக்கப்படுகிறார்கள்.

திறமையுடன், தைரியமாக இராணுவம் செயல்பட எப்படி இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது? 

வளர்ந்த நாடுகள், 
வளர்ச்சியடைந்த நாடுகள் என்று வளர்ச்சி, வளர்ச்சி என்கிறோமே ஒழுக்கம் ஏன் 
வளர்ச்சிபெற தடை இருக்கிறது? திருட்டு, சுற்றுச்சூழல் கேடு போன்ற 
குற்றங்கள் தடைபட நல்லொழுக்க பயிற்சி, மூளைச்சலவை ஏன் இல்லை இதிலே வளர்ச்சியடைந்த, வளர்ச்சியடைகிற நாடு எங்கே?

குடும்பக்கட்டுப்பாட்டுக்கு இரத்த உறவு வாரிசு ஒன்று போதும் என்ற முடிவுக்கு வர முக்கிய காரணம் என்ன?

வாழ்வாதாரங்கள் போதுமான அளவு திருப்தியாக அமைவதில் ஒருமனபடும் வாரிசுகள் 
ஏன் இல்லை? பல மனம் புண்படும் வாரிசுகள் வேண்டாமல் இருப்பதற்கு ஒரு 
முயற்சி தான் குடும்பக்கட்டுப்பாட்டுக்கு இரத்த உறவு வாரிசு ஒன்று போதும் என்ற முடிவுக்கு வர முக்கிய காரணம்.
பதுக்கலாகா ஒருவர் எத்தனை வீடுகளை வசதி வாரிசுகளாக வைத்துகொண்டு நல்ல பகிர்வுக்கான சிக்கலை ஏற்படுத்துகின்றனர். 

குடும்பக்கட்டுப்பாட்டுக்கு ஒரு வாரிசு, சமையல் கேஸ் போன்றவைகளை பதுக்கி கொள்வதில் எத்தனை வாரிசுகள்? 

சிவன், பார்வதி, முருகன், முகமது நபி, இயேசு அனைவரின் செயல்களும் நல்ல செயல்களே நாம் பயன்படுத்திக்கொண்டால் மட்டுமே. 

நல் அன்பை, நல் இரக்கத்தை, நல் கோபத்தை, நல் ஆறுதலை பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

 

பால் அபிஷேகம்

திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் இதன் அறங்களின்  பாலில் அபிஷேக அருள்நடைபெற்றால் இதன் நன்மைகளை உள்ளத்தில் அருந்தலாம். 

இரத்தத்திலிருந்தும் பால் உருவாகிறது. நாம் நன்மை
பெறுகிறோம். அந்த பாலை அருந்துவதாலும் நமக்கு இரத்தம் உருவாகிறது. நன்மை செய்யும் பசுவும்நமக்கு பால் தருகிறது. 

இறைவனின்
 அன்பு குணத்தின் இரத்தத்திலிருந்து அன்பின் பால் உருவாகிறது. இந்த பாலைஉள்ளத்தில் அருந்துவதால்    இறைவனுடைய
ஞானத்தின்
 இரத்தம் நம் உள்ளத்தில் உருவாகிறது. இதனால் நாம் நல்ல
செயல்புரிகிறோம்
. 
உள்ளத்தின் பாவங்கள் சாகின்றன. 

எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு, வருமுன் காப்போம்,   முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பதிலிருந்து நாம் புரிந்துகொள்வது என்னவென்றால் 

வருமுன் காப்போம் என்பதை முதல் நிறுத்தி நாம்
புரிகின்ற
 செயலில் குற்றம் வரக்கூடாது. குற்றம் வராமல் செயல்புரியவேண்டும்.
இதற்கான
 முயற்சியுடையார் இகழ்ச்சியடையார். 

ஒவ்வொன்றையும் அளந்திட ஒவ்வொரு கருவியுண்டு அதைக்கொண்டு திட்டமிடல் வேண்டும். நல்ல மகிழ்ச்சிக்கு செயல்புரிவோம். விழி, எழு,
வெற்றிகிட்டவே செயல்படலாம். 

நடந்தது நன்றாகவே நடந்தது, நடக்கிறது நன்றாகவே நடக்கிறது, நடக்க இருப்பது நன்றாகவே
நடக்கும்
. இதில் துன்பமோ, இன்பமோ இரண்டில் ஒன்று நன்றாகவே நடந்தது,   அல்லது நடக்கிறது,அல்லது நடக்க இருக்கும். 

ஒன்று நன்கு
உணர்ந்தது செயல்படுகிறது. மற்றொன்று நன்கு
உணரவைக்க செயல்படுகிறது.

 

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன். என்றும் இடுக்கண் வருங்கால்நகுக, இடுக்கமான வாசல் வழியே வருந்தி நுழைய புறப்படுங்கள். என்றும் சொல்லப்படுகிறது. 

இன்பம் என்ற ஒன்று நிகழ துன்பம் என்ற ஒன்று நிகழ்ந்திருக்கும் அப்பொழுதுதான் இன்பம் என்றஒன்றை தனித்து பிரிக்கமுடியும். இந்த துன்பம் யாருக்கேனும் நிகழ்ந்திருக்கலாம். 
நமக்கு நல்லதாக அமைய, நமக்கு வேண்டாததாக, வேறு யாருக்கேனும் அத்துன்பம் பொறுப்பாக இருந்திருக்கலாம். அல்லது அத்துன்பத்தை நாமே அனுபவித்திருக்கலாம். நமது இன்ப, துன்பத்தின் செயல்பாடு மனித உறவின் சங்கிலி அல்லது வலை பின்னலின் செயல் பரிமாற்றத்தை
பொறுத்தது.
 

உதாரணத்திற்கு ஒருவர் இறந்தால் அவரின் தயவை சார்ந்திருப்பவருக்கு துன்பம். இந்த இறப்பினால்
தேவை வாய்ப்பு வலி குறைக்கப்படுவதால் அதன் இன்பத்தை சிலர் பெறமுடியும். 

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன். என்பதில்  இன்பம்
நிகழ்ந்ததற்குள் மறைந்திருக்கும் துன்பத்தின் செயல்பாட்டை அறியாதவர்கள்.   துன்பம் நிகழ்ந்ததற்குள்மறைந்திருக்கும் இன்பத்தின் செயல்பாட்டை   வெளிக்கொணரும் வழி அறியாதவர்களாவார். இவர்கள்
இன்பம்
, துன்பத்தை பகுத்து அறியமுடியாததில் குழந்தைகள். 

வா இடுக்கனான துன்பமா உன்னை நன்மையாக மாற்றும் வழி அறிவேன் என்று   நகுகவானமகிழ்ச்சியால் இடுக்கனான துன்பத்தை எதிர்கொள்வர். 

மகிழ்ச்சிக்கனாதை சென்றடைய, இடுக்கமானதிலிருந்து விடுவிக்கும் வாசல் வழியே புறப்படவேண்டியிருக்கிறது. துன்பத்தின் வலி வெல்லும்பொழுது இன்பத்தின் வழி திறக்கிறது. 

நல்ல தேரை இழுக்க வடம் நல்ல முறையிலும் போதுமானவர்கள் சக்தியும் தேவை அதுபோல் நல்லஒழுங்கு செயல்பட போதுமானவர்கள் ஒருமனபாட்டுடன் செயல்படவேண்டும்.   சுதந்திரத்தைஉணருகிறோம்
இதன் பின்னியில் எத்தனை செயல்கள்.

 

நரகம்
நரகம் = நரகல் + அகம் 
என்பது நரகலான அகத்தை சீர்திருத்தும் இடமா? நரகல் என்பது
அருவருப்பை குறிக்குமா?
என்னென்ன அருவருப்பு உள்ளது? தீமை, பாவம்,
குற்றம், துன்பம் இவைகள்
அருவருப்பானவையா?

ஒரு நீதி இருக்குனா? அநீதி என்ற ஒன்ற நிகழ தேவைப்பட்டுருக்குமே.   அப்படியென்றால் நீதியைபுரிந்து கொள்ளும் அளவிற்கு அநீதியின் மதிப்பு எப்படிப்பட்டது? 

எல்லாம் மாயை. ஒன்று மற்றொண்டாக மாறும் நிலையிருக்கும்பொழுது மாயைதானே. தீமை என்பது
அருவருப்பு என்கிறோமே. குப்பை என்ற
ஒன்று இருப்பதனால் அதை அப்படியே விட்டுவிடுவது முறையல்ல? குப்பையை   பயன்படுத்தமுடியாதா? அதிலிருந்தும் நன்மை
பெறமுடியாதா? 

நரகம் என்பது பயன்படுத்தத்தானே? 
அன்பே சிவன் என்றும், ஏக இறைவன் அன்பாக இருக்கிறார் என்றும் , அன்பே   தேவன், தீமைக்கு தீமைசெய்யாதே, தீமையை நன்மையாக வெல்லு, இரக்கமாக  இரு என்று சொல்வதெல்லாம்நடவடிக்கைக்கு தகுந்தால் போலா? ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு சட்டமா? நரகத்திற்கு என்னசட்டம்?

அன்பு, இரக்கம் மாறாமல்
இருக்காதா? நரகத்தில் அன்பு,
இரக்கம் பயன்படுத்துவது கிடையாதா? அப்படியென்றால் கோபமும்,
தண்டனையும் உயர்ந்ததா? சீர்திருத்தம் வெற்றி
பெறவில்லையா? தண்டனை வெற்றிபெற்றதா? பாவம் நன்மையாக
மாற்றம் பெறவில்லையா? அப்படியென்றால் பாவம்
தொடர்ந்து வெற்றிபெறுமா? தவறான கண்ணோட்டத்தில், பாவம் செய்தவர்களுக்கு தீமை செய்துபாவத்தையே சம்பாதிப்பதா? 

நெருப்பு, அக்னி நரகத்தில் இருக்கும் என்கிறார்களே? நெருப்பு சமைக்க,   நன்மைக்காக 
பயன்படுத்துவோமா? தீமைக்காகவா? 
ஒரு ஆற்றல் இன்னொரு ஆற்றலாக மாறுகிறது? வெப்ப ஆற்றல் இயக்க   ஆற்றலாகவோ,
மின் ஆற்றலாகவோ மாற்றம் பெற்று நன்மைக்கு பயன்படுத்தவில்லையா?   நரகத்தின் பாவ வெப்பஆற்றலும் நன்மையாகாதா? 

நரகத்தை வைத்து எத்தனை சம்பாத்தியம் நடக்கிறது? அதன் நிலை என்ன?

 

மகிழ்ச்சி 
நரகத்தில் சென்றால் வேதனை பெருகுமா? ஆம் பிளஸ்
(+) 
ல் வேதனை தொடங்கி மைனஸ் (-) ல் பெருகும்
அதாவது மகிழ்ச்சிக்கு இட்டுசெல்லவே. 

நரகத்தில் அவியாத அக்னி. அன்பு எந்த அக்னியிலும்
அவியாது. அன்பு மாறாதது. 
அன்பு தீமை, நன்மையாகும்படி சகிக்கும். அன்பு நரகலோகத்தை மட்டும் அல்ல   எல்லா உலகத்தையும்வெல்லும்.

 

கண்டிப்பு
கணவன், மனைவி அன்பில்
ஊடல் வரும். வாய் வார்த்தை
சண்டை வரும் பிறகு கூடிக்கொள்வார்கள். ஆனால் ஒரு பெண்ணிடம் வற்புறுத்தல் என்றபலாத்காரத்தில் உறவு கொள்ள முயல்வது அல்லது ஈடுபடுவது குற்றம் என்கிறோமே. 

கடவுள் தண்டிப்பார் என்று மட்டும் சொல்லி பயமுறுத்தி பலாத்காரமாய் கடவுள் நம்மோடு தொடர்புகொள்வது எப்படி? அது நாம் அவரிடம் காட்டும் பக்த உறவுக்கு வழிவகுக்குமா?

கடவுள் கணவன், மனைவி ஊடலைபோல். 
நம்மோடு நல்ல அன்புக்கு இனிய கண்டிப்புடன் நம்மை அரவணைத்து நம் ஒப்புதல், ஒப்புரவோடுநம்மீது
அக்கறைக்கொள்ளமாட்டாரா நாம் தவறும் பொழுதும்!

 

கண்டிப்பு- 1

நல்ல
வாழ்க்கைக்காக பெற்றோர் சிலர்
, தன் மகளுக்கு வற்புறுத்தி
திருமணம்
 செய்து வைக்கிறார்கள். அது பிற்காலத்தில் அவர்கள் மகளே தனக்கு பெற்றோர் நல்ல வாழ்கையைதான் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள் என்று
அறியும்படியான
 நிகழ்வுகளும் உண்டு. அப்பொழுது பெற்றோருக்கும், மகளுக்கும் நல்ல ஒப்புதல்ஏற்படுகிறது.

அதுபோல், கடவுளும், நம் நன்மைக்காக சில நேரங்களில் நம்மை மனசாட்சி மூலம் பேசுகிறார். நாம்இறுதிநிலையில் தவறக்கூடாது
என்பதற்காக வற்புறுத்தி கண்டித்து
 உணர்த்துகிறார். இவ்வாறு உணர்த்துதல் மூலம் பேசுகிறார்.இவ்வாறு கடவுள் நம்மை கண்டிக்கும் முன்னோ, பின்னோ நல்ல ஒப்பரவு
ஏற்படுத்திக்கொள்கிறார் .
 கடவுள் நம்மை கண்டிப்பது, நல்ல ஒப்புதல் கிடைக்கும் என்பதை முன்க்கூட்டியே அறிந்ததுதான் செயல்படுகிறார். இவ்வாறாக நல்ல மகிழ்ச்சிக்கான அன்பிற்குநம்மோடு உறவாடுகிறார்

 

மன்னிப்பு 

மன்னிப்பு எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு”
என்பார்கள்.
 

ஆம், மன்னிப்பின் வகைகளில் 1. அவமன்னிப்பு, 
2. 
நேச மன்னிப்பு என்பதில் 
அந்த விரும்பாத மன்னிப்பு “அவமன்னிப்பு” ஆகும்.

மன்னிப்பு கோருவோறும், மன்னிப்பு அளிப்போருக்கும் இடையில் நல்ல
உடன்படிக்கை
 ஏற்பட்டு நல்லது ஏற்படுவதில் முன்னேற்றம் இருக்கவேண்டும். 

உடன்படிக்கை மீறப்படும்பொழுது அது அவமாக்கும் என்ற அவமன்னிப்பு ஏற்படுகிறது, அது மாற்றம் பெற்று
நேசமன்னிப்பாக வேண்டும்.

 

வீரிய கலப்பினம்

அறிவியல் கல்வியில் வீரிய கலப்பின சேர்க்கை தாவரங்கள், விலங்கினங்களுக்கு மட்டும்தானா?

சமூக அறிவியலில் வீரிய கலப்பின சேர்க்கையினால் மனிதர்களும் நன்மைகள்   பெறக்கூடாதா?

அறிவியல் அறிவுறுத்துவதுபோல் சொந்த இரத்த உறவில் திருமணம் நல்லதல்ல என்கிறதே ஏன்?

சாதி தீண்டாமையை ஒழிக்க, ஏழை  பணக்கார நிலை தீண்டாமையை ஒழிக்க,   படித்தபடிக்காத நிலைதீண்டாமையை ஒழிக்க, மத தீண்டாமையை ஒழிக்க, நாடுகலாச்சார தீண்டாமையை ஒழிக்க சமூகஅறிவியல் வீரிய கலப்பின சேர்க்கை திருமணம் செய்து நன்மைகள் பெற வழிக்காணக்கூடாதா?

சொந்த இரத்த உறவு இல்லாத ஏதோ ஒன்றில் வீரிய தன்மை பெற்றிருப்பவர் திருமணம் செய்யலாமே. 

அது ஜாதியிலோ, வசதியிலோ, படிப்பிலோ, தங்கள் மத அறிவிலோ, நாட்டு கலாச்சாரத்திலோ, அழகிலோ,மொழி ஆற்றலிலோ, நடனத்திலோ, இசையிலோ, பேச்சு திறமையிலோ, சமூக நல ஆர்வத்திலோ,ஆரோக்கியத்திலோ, உடல் உழைப்பிலோ, மூளை உழைப்பிலோ போன்ற பல திறன்களில் ஏதோஒன்றில் வீரிய தன்மையில் செழித்திருந்தாலும் சமத்துவ பொருத்தம் பார்த்து வேறுப்பட்டவர்களோடுதிருமணம் செய்து நன்மைக்கென்று ஒன்றுபடக்கூடாதா? 

திருமணம் செய்துக்கொள்ளாத மற்றவர்களுடன் சகோதரத்துவத்தில் பொருந்திக்கொள்ளக்கூடாதா?

 

களவும் கற்று மற

கற்பழிப்பை எப்படி கற்று மறப்பது? 

களவு கற்பதற்கு ஒரு பள்ளிக்கூடம் வேண்டும்.

களவு கற்றதை மறப்பதற்கு களவின் உயிர் நீங்க வேண்டும். 

ஒவ்வொன்றையும் அளக்க கருவிகள் உண்டு. நிலத்தை அளவிட,
பாலை அளவிட, உடையை அளவிட,
தானியங்களை அளவிட, கம்ப்யூட்டரின் நினைவகத்தை அளவிட, மரங்களின்   ஆயுளை
அளவிட மீட்டர், லிட்டர், கிராம்,
இரண்டடிமானம், தசம எண் போன்றவைகள் உள்ளன. 

களவு, கற்பழிப்பு போன்ற பல குற்றங்களின் வலியை கற்கும் பள்ளிக்கூடமாக   எண்ணங்களில் அளந்துபயிலலாம். நம் செய்கையால்
இந்த குற்றங்களை செய்யாமல் இருக்கவேண்டும். இதற்காண எண்ணங்களோடு
போராடி எண்ணங்கள் செய்கையாக மாறாமலும், எண்ணம் உயிர் பெறாமலும்,   நல்ல செய்கையால்வெற்றிபெறச் செய்தால், எண்ணத்தில் உயிர் பெற்றது செய்கையில் உயிர் நீங்குவதால் அதுசெய்கையில் மறக்கப்படுகிறது.

உடலால் வலி உணர்ந்தால்தான் செய்கையில் செய்யாமலிருக்க முடியுமென்றால் நாம் இன்னும்பக்குவப்படவில்லை. நாம் நல்ல
உணர்வு இல்லாதவர். நம்மை கட்டுப்படுத்த காவல் அதிகாரி, கோர்ட், சமுதாயம்
போன்றோர் எப்பொழுதும் கண்காணிக்க வேண்டுமோ, உணர்வுபடக்கூடாதா   செயலில்.

கடவுள் பூவின் வாசனையைவிட மென்மையும் கொண்டவர். அதுபோல் நம்    எண்ணத்திலேயேகுற்றத்தின் வலியை அளந்து புரிந்துக்கொண்டு நல்ல    செய்கைகளை செய்வோம். 

இப்படியும் நடக்கிறது, நம் வலியை
யாரோ ஒருவர் சுமக்கின்றனர். அல்லது யாரோ
ஒருவர் சுமத்துகின்றனர்.
மின்சாரத்தின் கண்டுபிடிப்பால் கண்டுபிடித்த யாரோ ஒருவரின் மூலமாக பல   துன்பங்கள் நீங்கியது.இத்துன்பத்தை நம் அனைவருக்காகவும் ஒருவர் கண்டுபிடிப்பால் தன் எண்ணத்தில் சுமக்க வளர்ச்சிபெற்றார். நமக்கு துன்பத்தை சுமத்த   வெடிகுண்டை வெடிக்கச்செய்து பலி செய்வதால் ஒருவர் தீயஎண்ணமே செயலால் வளர்ச்சி பெறுகிறது. 

கடவுளும் நம்மை சுமக்கிறார், நம்மீதும் சுமத்துகிறார் அது என்ன? நாம் நலம்   பெறவே இறைவன். 

நாம் சுவாசித்து சக்தியை பெறுவது போல். குற்றங்களை செயலால்
அல்ல எண்ணத்தால் உள்ளிழுத்து சுத்திகரிப்பு சக்தியால் செயலில் எண்ணத்தை   நன்மை புரியவைக்கவேண்டும். நல்லெண்ணமாக.

 

வாரண்டி  கேரண்டி 

நாம் பயன்படுத்த போகும் பொருள்களுக்கு வாரண்டி, கேரண்டி என்ற உத்தரவாதம் இருக்கா? என்றுகவனப்படுத்தி எச்சரிகை பார்த்து நீண்ட நாள் நன்கு பயன்படுத்த   முயற்சிக்கிறோம்.

பயன்படுத்த போகும் பொருள்களுக்கே இந்த நிலை என்றால், பயன்படுத்தும்   நமக்கு எந்த நிலை?

நாம் உயிரோடு இருக்கும் நாட்களில், நாம்
நோய், நொடியை எதிர்த்து ஆரோக்கியத்துடன் இருக்கிறோமா? 
இந்த ஆரோக்கியத்தின் வாரண்டி, கேரண்டி என்ற உத்தரவாதம் நமக்கு எப்படி? 
உள்ளத்திலே ஆரோக்கிய அன்பின் வாரண்டி, கேரண்டி என்ற உத்தரவாதம் நமக்கு எப்படி? 

இதற்காக நம்முடைய எச்சரிப்பு கவனம் செயல்பாடு எப்படி?

வாகனங்களில் எரிபொருள் சக்தியானது எந்தவகையில் மைலேஜ் கொடுக்கிறது   என்று பார்க்கிறோமே?

நம் செயல் வெளிப்பாடு உழைப்புக்கும், அறிவுக்கும், ஞானத்திற்கும், அன்பை   தருவதற்கும், இரக்கத்திற்கும், பொறுப்புள்ள கோபத்திற்கும் நல்லதிற்கென்று எத்தகைய   மைலேஜ்  கொடுக்கிறது.

 

மதிப்பு

நாம் பயன்படுத்தும் பொருள்களே மதிப்பானதாக இருக்க
வேண்டும் என்றால், நாம் மதிப்புள்ள நல்ல வாழ்க்கை தேட
வேண்டாமா? எந்த மதிப்பை
உயர்த்த வேண்டும். எந்த
விதத்தில் நாம் கெட்டிக்காரராய் இருக்கவேண்டும்?

உணவு நமக்கு அடிமையாக இருக்க வேண்டும்? நாம்
உணவுக்கு அடிமையாய் இருக்கவேண்டும். 
உணவு இல்லையேல் நாம் உயிர் வாழ்வது சிரமம். ஆகவே உணவை
நம்பி இருப்பதால் நாம் உணவுக்கு அடிமை. 

சரியான உணவை சரிவர வரையறுத்து எந்தமுறையில் நாம்
சாப்பிட வேண்டும் என்ற அதிகாரம் நமக்கு உண்டு. ஆகவே
அந்த வகையில் உணவை அடிமைப்படுத்தி நாம் அதிகாரம்
கொண்டு பயன்படுத்த வேண்டும். 

அடிமை, அதிகாரம் இரண்டும் உள்ள சுதந்திரமான
அடிமையாய் இருந்து சரிவர வரையறுக்காமல்
செயல்பட்டால் நல்ல மாற்றத்திற்கான மாற்று வழிகளை
கொண்டு சரிபடுத்தும் அடுத்த முயற்சியால் நல்ல
வாழ்க்கைக்கு வெற்றிபெறலாமா?

உடலுக்கு, உள்ளத்திற்கு, பிறரின்
நன்மைக்கு,
சுற்றுச்சூழல் நன்மைக்கு என்னென்ன சரியான உணவு?
சுவாச காற்று, அன்பு போன்ற
நல்ல உணவு உள்ளன.

 

கலியுக
பஞ்ச(ம்) பாண்டவர்
 

விடை
அளிக்க தடை

கடை
நிலையில் சிலர்
 
105 
வாலிபரில்
வாழ்க்கை பகிர

101 
கன்னிகளின்
இருப்பு
 
இப்படி
ஒரு சூழல்
 
பஞ்சம்
வந்தது
 
ஒவ்வொரு
100 வாலிபர்
ஒவ்வொரு
100 கன்னி என்று 
மண உறவு
உரிமை
 
ஒன்றுக்கு
ஒன்று என்று முந்தியது
 

பஞ்சம் –
பஞ்ச பாண்டவர்

கொஞ்ச ஒரே
கன்னி
 
நெஞ்சம்
நிமிர்ந்த மீதி
 5 பேர் 
உணவு
பரிமாற ஒரு கை

உறவு
பரிமாற ஒரு மங்(கை)

ஐந்து
விரல்களால்
 
ஆம் 
ஒரு
பாஞ்சாலிக்கு

ஐந்து
பாண்டவர்
 

பஞ்ச
பூதம் நீர்
, நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம்
ஒழுங்கின்
தன்மை பஞ்சத்திற்கு
 
ஒழுங்கின்மையை
செப்பனிட

உடைத்திடுவோம்
தடையின் பாரத்தை
 
அடைத்திடுவோம்
கடைநிலை துவாரம் வரை

அது
எந்த ஒசோனோ
, அன்பில் பாமரனோ
நல்ல
முழுமை நிலை மீட்பு விடையாக.
 

பஞ்ச
பாண்டவர் ஐவருக்கும்
 
ஒரே
கன்னியின் ஆதரவு

பஞ்சபூதம்
5 க்கும் 
ஒரே
கண்ணியத்தின் ஆதரவு
 
அது 
மனிதர்
அனைவரும் ஒரு மனதாய்

ஒழுங்கின்
கண்ணியத்திற்கு தந்த ஆதரவு
 

நம் முன்னோர் பல நூறு தலைமுறை சோதித்ததைவிட
இக்கலியுக தலைமுறை சோதித்ததே அதிகம் 
சாதிக்கபோவதும் அதிகம்  ஐந்தின் ஒழுங்குக்கு

 

சத்தத்தின் அமைதி

படித்து பார்க்கும் சத்தம் ஒயனும்
அதின் நல்ல வழிக்கான 
படைப்பை பார்க்கும் சத்தம் கேட்கனும் 

இறைவனை தரிசிக்கும் சத்தம் ஒயனும்
அதின் நல்ல அறவாழ்வின் 
படைப்பை பார்க்கும் சத்தம் கேட்கனும் 

ஜெபிக்கும் சத்தம் ஒயனும்
அதின் நல்ல குணப்படுத்தும் 
படைப்பை பார்க்கும் சத்தம் கேட்கனும் 

தொழுகை சத்தம் ஒயனும்
அதின் நல்ல தகுதிக்கான 
படைப்பை பார்க்கும் சத்தம் கேட்கனும்

அமைதியின் சத்தம்

படித்து பார்க்கும் சத்தம் கேட்கனும் 
அதின் நல்ல வழிக்கான 
படைப்பை பார்க்கும் சத்தம் ஒயனும் 

இறைவனை தரிசிக்கும் சத்தம் கேட்கனும்
அதின் நல்ல அறவாழ்வின் 
படைப்பை பார்க்கும் சத்தம் ஒயனும் 

ஜெபிக்கும் சத்தம் கேட்கனும்
அதின் நல்ல குணப்படுத்தும் 
படைப்பை பார்க்கும் சத்தம் ஒயனும்

தொழுகை சத்தம் கேட்கனும் 
அதின் நல்ல தகுதிக்கான 
படைப்பை பார்க்கும் சத்தம் ஒயனும்

அமைதி, சத்தம் என்ற இரண்டும் தேறனும்
இல்லை இரண்டும் ஒன்றையொன்று புழுங்கி சீறிடும்

 

ஓய்வு 

வேலை நிலுவையில் இருக்கும்பொழுது ஓய்வு எடுக்க மனம் வருமா?
ஓய்வு எடுத்துக்கொண்டே இருந்தால் வேலை பளு உயரும் என்ற பதட்டம்   வராதோ?
வேலை செய்தோம் ஓய்வு எடுத்தோம், ஓய்வு எடுத்தோம் வேலை செய்தோம் என்ற நல்ல முடிவுவேண்டாமோ?

வேலை மட்டும் செய்தால் போதுமா நல்லது, கெட்டது அறியும் ஞானம் வேண்டுமே?
நல்லது, கெட்டது என்ற ஞானம் மட்டும் அறிந்தால் போதுமா அதை செயல்படுத்தும் வேலை பணிவேண்டாமா? 

இறைவனை அறிவது நல்லது, கெட்டது அறிந்து ஞானத்தோடு செயல்படுவது என்று ஆகுமே? 

இரவு நேர ஓய்வு எடுக்க, எல்லா நாட்டினருக்கும் ஒரே நேரத்திலா இரவு இருக்கிறது ?
பகல் நேர வேலை செய்ய, எல்லா நாட்டினருக்கும் ஒரே நேரத்திலா பகல் இருக்கிறது? 
நல்ல சுழற்சிக்கு நல்ல சூழல் அமைந்தால் நல்ல ஓட்டம் அமையும். 

 

கிரகம் 
புரியாமல் இருக்கும் வரை விக்கிரகம் 
அது வெளிபடுத்தும் 
சத்தியத்தை அறிந்துவிட்டால் சத்தியாக்கிரகம் 
இதில் வணங்குதல் என்பது 
சத்தியாக்கிரகத்தின் அறிவுறுத்தல்களை 
ஏற்று பணிவது ஆகும். 

இதில் வணங்குதல் என்பது 
இதுவரை என்னவென்று அறிகிறோம் 
இறைவனின் வார்த்தையான மனசாட்சி 
நம்மிடம் நன்கு பேசும் 
பயிற்சி பெற்று இருக்கவேண்டும்
இதில் செய்யக்கூடாது என்று அறிவுறுத்துவதை ஏற்று பணிகிறோமா? 
செய் என்று அறிவுறுத்துவதை ஏற்று பணிகிறோமா?
இல்லை எல்லாவற்றுக்கும் தலையாட்டுகிறோமா?
எப்படி தலை வணங்குகிறோம்?

தவறு அல்லது பாவம் என்பது 
செய் என்று அறிவுறுத்துவதை செய்யாமல் விட்டுவிடுவது 
செய்யாதே என்று அறிவுறுத்துவதை செய்வது
இந்த மீறுதல்கள்தான்

கெட்ட சோம்பேறி எதை செய்யமாட்டார்? 
கெட்ட ஊதாரி எதை செய்வார் ?

இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் இருந்தாலும் 
அது தீமை நோக்கிய பயணம் 

சிலைகளும், வரைபடங்களும் , எழுத்துகளும், சைகைகளும் 
கருத்தை வெளிப்படுத்தும் கருவிகள் 

மாற்று திறனாளிகள் (செவிடர், குருடர்)
கற்பதற்கு 
பிரத்தியோக கருத்தை வெளிப்படுத்தும் கருவிகள் உண்டு.

இந்த வெளிப்படுத்தும் கருவிகளை 
புரியாமல் இருக்கும் வரை 
அக்கருவி விக்கிரகம் 
வெளிப்படுத்தும் 
பயிற்சியின் கருவிகளால் 
சத்தியத்தை அறியும் 
சத்தியாகிரகத்தின் அறிவுறுத்தல்களை 
வணங்கி தெய்வமாக ஏற்கலாமே?

நன்மை, தீமையை 
மனசாட்சிக்கு பயிற்சி அளிக்காத கருவிகளான 
விக்கிரக நிலையின் அறியாத நிலைக்கு 
நாம் விலகியிருக்க வேண்டும். 
விக்கிரகத்தை விட்டு விலகி 
சத்தியாகிரகத்தை ஏற்றுக்கொள்வோம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிந்தனைப் புகார் Copyright © 2015 by ராஜ் கே.ராஜேந்திரன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book